FLASH NEWS

&title=CNN-IBN &content= POI CHEITHI VELIYIDUVATHIL MUTHALIDAM CNN-IBN

Sunday, April 3, 2011

எடியூரப்பா-வின் நில பேர ஊழலின் தொடர்ச்சி

நில ஊழலில் வழக்கம் போலவே மீண்டும் சிக்கியிருக்கிறார் எடியூரப்பா.

கர்நாடக மாநில முதலமைச்சர் வன இலாகாவுக்குச்சொந்தமான ரிசர்வ் நிலத்தை பிஜேபி MP ஒருவருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு தாரை வார்த்துத் தந்திருக்கிறார்.
கர்நாடகாவில் வழக்கமாக நடக்கும் நில பேர ஊழலின் தொடர்ச்சியாக மாநில முன்னாள் பிஜேபி தலைவரும், எடியூரப்பாவின் வலது கையாக செயல்படக் கூடிய ஒருவருக்கு அரசு நிலத்தை தாரைவார்த்துத் தந்திருக்கிறார்.

இம்முறை எடியூரப்பா அரசு சுள்ளியா மங்களூருக்கு அருகிலுள்ள 10.5 ஏக்கர் ரிசர்வ் வன நிலத்தை உடுப்பி MP சதானந்த கௌடாவின் அறக்கட்டளைக்கு விதிமுறைகளை மீறி இலவசமாக கொடுத்திருக்கிறார்.
Photo: S Radhakrishna
இதற்கு முன்பு மாநில மின் இலாகாவுக்கும், முஸ்லிம்களின் கப்ருஷ்தானிற்கும், அப்பகுதி பஞ்சாயத்திற்கும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த அந்த இடம் கர்நாடக அரசின் வர்ப்புருத்தளால் KS கௌடா கல்வி அறக்கட்டளைக்கு அவசரமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த இடத்தின் சர்வே எண் 171-P7 மங்களூரிலுள்ள சுள்ளியா தாலூக்காவிற்கு அருகில்.


சதானந்த கௌடா பிஜேபி-யின் மாநிலத்தலைவராக இருந்தபோது எடியூரப்பாவின் அரசுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்ற காரணத்திற்காகவே அந்த அரசு நிலத்தை தானமளிதிருக்கிறார் என்பதே கர்நாடக அரசியலில் இப்போதைய பரபரப்பான பேச்சாக இருக்கிறது.


நன்றி: தெஹல்கா



imran@tehelka.com


No comments:

Post a Comment